அமெரிக்காவில் சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் தரைமட்டம் : 3 பேர் உயிரிழப்பு ,10 பேர் காயம்

அமெரிக்காவில் சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் தரைமட்டம் : 3 பேர் உயிரிழப்பு ,10 பேர் காயம்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா கடற்கரையோர பகுதியில் உள்ள Brunswick Countyயில் சூறாவளி தாக்கியதில் 3பேர் உயிரிழந்தனர்.
மேலும் 10பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளியால் அப்பகுதியில் உள்ள வீடுகள் எல்லாம் இடிந்து தரைமட்டமாயின.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் தற்போது பல இடங்களில் பனி கொட்டி வரும் நிலையில் வடக்கு கரோலினாவில் சூறாவளி தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments