தேர்தல் நேரத்தில் கிரண்பேடியை மாற்றியிருப்பது கண் துடைப்பு நாடகம் - மு.க. ஸ்டாலின்

0 2113
தேர்தல் நேரத்தில் கிரண்பேடியை மாற்றியிருப்பது கண் துடைப்பு நாடகம் - மு.க. ஸ்டாலின்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் காலதாமதமான நடவடிக்கை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு எனக் கூறியுள்ளார். தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம் எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மக்களை ஏமாற்றக் கடைசி நேர நடவடிக்கை எனவும் சாடியுள்ளார்.

கிரண்பேடியை வைத்து பாஜக செய்த தரம் தாழ்ந்த அரசியலையும், அம்மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பாழ்படுத்திய மிக மோசமான செயலையும் மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments