எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ்..!
எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ்..!
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிபர் எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை, அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் மீண்டும் கைப்பற்றி உள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் நேற்று 2 புள்ளி 4 சதவிகித சரிவை சந்தித்தன. இதனால் அவருக்கு சுமார் 33 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, சொத்து மதிப்பு குறைந்தது.
இதை அடுத்து, சுமார் 13 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் ஜெப் பிசோஸ் முதலிடத்தை கைப்பற்றி உள்ளார். கடந்த 3 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த பிசோஸ் 6 வாரங்களுக்கு மட்டுமே இரண்டாவது இடத்திற்கு சென்று விட்டு இப்போது முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.
Comments