பண்ருட்டி அருகே ரவுடியை கொலை செய்த பின் தலையுடன் தப்பிச் செல்ல முயன்றவனை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

0 3767
கடலூர்: என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே ரவுடியை கொலைசெய்து, தலையை துண்டித்து கையோடு எடுத்துச் சென்ற கொடூரக் கும்பலை சேர்ந்த கிருஷ்ணா என்பவனை போலீசாரால் என்கவுன்டர் செய்தனர்.

திருப்பாதிரிப்புலியூர் அருகே சுப்புராயலு நகரை சேர்ந்தவன் பிரபல ரவுடி வீரா. கடலூர் உழவர் சந்தையில் பழக்கடை நடந்தி வந்த இவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்றிரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த வீராவை, பைக்கில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளது.

இருப்பினும், ஆத்திரம் தீராத அந்த கும்பல், வீராவின் தலையை துண்டித்து கையோடு எடுத்துக் கொண்டு தப்பிவிட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை துவங்கினர்.

தொடர்ந்து இரவு முழுவதும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், கொலை கும்பலை சேர்ந்த 6 பேர் குடுமியான் குப்பம் பகுதியில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.

அவர்களை பிடிக்கச் சென்ற போது, கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவன், காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. அவனை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார், மீதமுள்ள 5 பேரை கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து துண்டிக்கப்பட்ட வீராவின் தலையையும் போலீசார் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments