முகக்கவசம் அணியுங்கள் அல்லது மீண்டும் ஊரடங்கை சந்தியுங்கள்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

முகக்கவசம் அணியுங்கள் அல்லது மீண்டும் ஊரடங்கை சந்தியுங்கள்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
மகாராஷ்ட்ராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் புதிததாக 4 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பொதுமக்கள் அரசின் வழிகாட்டல் நெறிகளைக் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டார். முகக்கவசம் அணிவது, இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என்று கூறிய அவர் விதிகளை பின்பற்றாவிட்டால் மும்பையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.
Comments