வேளாண் சட்டங்களால் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் - பிரதமர் மோடி

வேளாண் சட்டங்களால் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் - பிரதமர் மோடி
வேளாண் சட்டங்களைப் பற்றிய பொய்ப்பிரச்சாரம் பரப்பிவிடப்படுவதாக தெரிவித்த பிரதமர் மோடி இந்தச் சட்டங்களால் சிறிய விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பஹராய்ச்சில் போர் வீரனாக விளங்கிய அரசன் சுஹெல்தேவின் Suheldev சிலைக்கு அடிக்கல் நாட்டி காணொலி வாயிலாக உரைநிகழ்த்திய மோடி,பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்ற சட்டங்களை இயற்றியவர்கள் இப்போது உள்நாட்டு நிறுவனங்களுக்கு எதிராக விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக சாடினார்.
முந்தைய அரசுகளின் தவறுகளைத் திருத்துவதற்கு தமது அரசு முயற்சி செய்து வருவதாகவும் மோடி தெரிவித்தார்.
Comments