இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் ருசிகர மொமன்ட்ஸ்... மாஸ் காட்டிய இந்தியா!

0 3945

கொரோனா பேரிடரால் உலகமே முடங்கி போன நிலையில், அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்ட கிரிக்கெட் உலகம் கடுமையான தொற்று பரவல் கட்டுப்பாடுகளுடன் போட்டிகளை நடத்தி வருகிறது.

கொரோனா பேரிடருக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்திருந்தாலும். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தான் கொரோனவிற்கு பிறகு இந்தியாவில் நடைபெற்ற முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி.

சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் டெஸ்ட் போட்டி என்பதால் ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு, போட்டியின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்ற செய்தி இடியாய் வந்து விழுந்தது.

இருந்த போதும், வரலாற்றில் முதல் முறையாக சேப்பாகத்தில் விளையாடும் டெஸ்ட் போட்டியில் ஆடும் 11 வீரர்களில், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் என இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர் பும்முராவிற்கு இந்தியாவில் இதுவே முதல் டெஸ்ட் போட்டி. இங்கிலாந்து அணி  கேப்டன் ரூட்டிற்கு 100ஆவது டெஸ்ட் போட்டி, பட்லர்க்கு 50ஆவது டெஸ்ட் போட்டி என ரசிகர்கள் இல்லாத முதல் டெஸ்ட் போட்டியாக சேப்பாகத்தில் நடைபெற்றது.

இந்த டெஸ்ட் தொடரை குறைந்தது 2-1 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்ற முனைப்புடன் இரண்டு அணிகளும் களமிறங்கின.

இங்கிலாந்து போர் வீரர் கேப்டன் டாம் மூரே கொரோன தொற்று பாதிப்பால் உயிர் இழந்ததை அடுத்து இங்கிலாந்து அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டையுடன் விளையாடினர், தனது 100 வது போட்டியில் கேப்டன் ரூட் 200 அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவரிடம் இருந்து வெற்றியை மீட்டெடுக்க போராடிய அஸ்வின் ஆறு விக்கெட் வீழ்த்தியது என இந்த தொடரில் வெற்றி கனியுடன் கணக்கை தொடங்கியது இங்கிலாந்து அணி.

 

பேக் டூ பேக் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது, ரசிகர்களை மட்டுமல்லாது வீரர்களையும் குதூகலம் படுத்தியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட I, J, K ஸ்டாண்டுகளில் ரசிகர்கள் கொக்கரிக்க உற்சாகமுடன் முதலில் பேட் செய்தது இந்திய அணி.


இந்திய அணியின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இங்கிலாந்து பவுளர்கள் பதம்பார்க்க, கெத்தை விட்டுக்கொடுக்காத ரோஹித் சர்மா, 161 ரன்களை அடித்து இங்கிலாந்து அணிக்கு தனது ஹிட் மேன் பட்டத்தை நினைவூட்டினர். பின்னர் பந்து வீசிய அஸ்வினோ ஐந்து விகேட்களை வீழ்த்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வந்தவழியிலயே பவிலியனுக்கு திருப்பி அனுப்பினர்.

கொரோன தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் உள்ள வீரர்களை போட்டிக்கு நடுவே ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியை தாண்டி மைதானத்திற்குள் சந்திக்க சென்றது வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தான் விசில் அடித்து ரசிகர்களையும் அடிக்க சொல்லி பத்தல இன்னும் சத்தமா என பிகில் பட பானில் கேப்டன் கோலி ரசிகர்களை உசுப்பியது, மைதானத்தின் உள்ளே அஸ்வின் வாத்தி கம்மின் டான்ஸ் மூவ்மெண்ட் போட்டு உற்சாகப்படுத்தியது என ஸ்டேடியமே ஆரவாரமாக இருந்தது.

தமிழக தேர்தல் களத்தில் பிரதான கட்சிகளின் விளம்பர பாட்டை போல,

'அஸ்வின் தான் வராரு
விக்கெட் எடுக்க போறாரு'

*'வெற்றி நடை போடும்
தமிழ் மகனே'*

என கிரிக்கெட்டில் தமிழகத்தின் கதாநாயகனாக அஸ்வினை கொண்டாடி தீர்த்தனர்.

சுவாரசியமான போட்டிக்கு நடுவே பவுண்டரி லைனில் பீல்டிங்கில் நின்று கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை.. செல்லமாக அலிபாய் என் அழைத்து வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் சேட்டை செய்து வாய் திறக்காத நடிகர் அஜித்தையே அறிக்கை விட செய்தது,

இந்திய ஆடுகளத்தை தவறாக பேசிய மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு எல்லாம் தனது அசத்தலான செஞ்சுரி மூலம் அஸ்வின் பதிலடி கொடுத்தது. அதை கொண்டு நெட்டிசன்கள் சீனியர் வீரர்களை கலாய்த்து தள்ளினர்.

அறிமுக ஆட்டத்தில் அக்சார் பட்டேல் ஐந்து விக்கெட் வீழ்த்தியது, அஸ்வின் 200 வது இடது கை ஆட்டக்காரர் விக்கெட் வீழ்த்தியது. கேப்டன் கோலி தலைமையில் 21 வது டெஸ்ட் வெற்றி, 1000 வது விக்கெட் என பல சாதனைகளுடன் முதல் வெற்றியை பதிவு செய்து இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்தது இந்திய அணி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments