ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்குப் பின் ரூ. 8 ஆயிரத்தைத் தாண்டிய மஞ்சள் விலை; மகிழ்ச்சியில் விவசாயிகள்

0 45283
ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குவிண்டால் மஞ்சளின் விலை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குவிண்டால் மஞ்சளின் விலை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வடமாநிலத்தவர்கள் இங்கு வந்து விதை மஞ்சளை வாங்கிச் சென்று விளைவித்து விற்பனை செய்ததால் ஈரோட்டு மஞ்சளுக்கான விலை கடந்த சில ஆண்டுகளாகவே சரிவை சந்திக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், மீண்டும் ஈரோடு மாவட்டச் சந்தைகளில் மஞ்சளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

பழைய விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 8 ஆயிரத்து 269 ரூபாய் வரையிலும், பழைய கிழங்கு மஞ்சள் 7 ஆயிரத்து 499 ரூபாய் வரையிலும், புது விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 7 ஆயிரத்து 711 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் 7 ஆயிரத்து 699 ரூபாய் வரையிலும் விற்பனையானது.

புது மஞ்சள் வரத்து குறைவு காரணமாகவும், பழைய மஞ்சளுக்கான தேவை அதிகரித்து வருவதாலும், ஏற்றுமதியின் அளவு கடந்தாண்டுகளை விட 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments