விழுப்புரம் அருகே அதிமுக மாநில மாநாடு, கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள வாய்ப்பு

0 1476
அதிமுக மாநில மாநாடு வரும் 28ஆம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மாநில மாநாடு வரும் 28ஆம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டிக்கு அருகே உள்ள வி.சாலையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டிற்கான பூமி பூஜையும் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 1,2,3 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் அதிமுக மாநில மாநாடு நடைபெற்றது.

அதன்பின்னர் அதிமுக சார்பில் மாநில மாநாடு நடத்தப்படாத நிலையில், வருகிற 28-ம் தேதி  மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments