நாட்டை அடிமைப்படுத்தியவர்களால் எழுதப்பட்டது மட்டுமே இந்தியாவின் வரலாறு அல்ல... மக்களிடம் வழங்கும் நாட்டுப்புற கதைகளிலும் வரலாறு உள்ளது - பிரதமர் மோடி

நாட்டை அடிமைப்படுத்தியவர்களால் எழுதப்பட்டது மட்டுமே இந்தியாவின் வரலாறு அல்ல என்றும், தலைமுறை, தலைமுறையாக நாட்டு மக்களிடையே வழங்கி வரும் நாட்டுப்புற கதைகளிலும் நாட்டின் வரலாறு உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பாக்ரைச் மாவட்டத்தில் மகாராஜா சுக்கேல் தேவ் நினைவு சின்னத்திற்கு அடிக்கல் நாட்டியும், சித்தூரா ஏரியை மேம்படுத்தும் திட்டம், மகாராஜா சுக்கேல்தேவ் நினைவு மருத்துவ கல்லூரியை தொடங்கி வைத்தும் பேசிய அவர், மகாராஜா சுக்கேல் தேவ் போன்றவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை ஒரு போதும் மறக்க முடியாது என்றார்.
நேதாஜி, சர்தார் படேல், அம்பேத்கர் போன்றவர்களுக்கு உரிய மரியாதை முந்தைய ஆட்சியில் வழங்கப்படவில்லை என்றார். அடுத்து வரும் வசந்த காலம் நாட்டுக்கு புதிய நம்பிக்கையை, வளர்ச்சியை கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments