அமெரிக்காவில் ஒரு தகப்பா...நாட்டாமை படப் பாணியில் மகனிற்கு எழுந்த ஒரு வினோத சிக்கல்

அமெரிக்காவில் உள்ள இளைஞர் ஒருவருக்கு அவரது தந்தையால் வினோத சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓரிகன் பகுதியைச் சேர்ந்தவர் சேவ் ஃபோர்ஸ். 24 வயதான இவருக்கு தனது சக தோழர்களை போல டேட்டிங் ஆப் பயன்படுத்தவேண்டும் என்று தான் ஆசை. ஆனால் அவருக்கு அதில் ஒரு பிரச்சனை உள்ளது
இணையத்தளம் மூலம் சேவ் ஃபோர்ஸ்,அவர் தந்தையைப் பற்றிக் கண்டறிந்த ஒரு உண்மை அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சேவ் ஃபோர்சின் தந்தை 500 முறை உயிரணுக்களை விற்றுள்ளார் என்பதும், அதனால் சேவ் ஃபோர்சின் தந்தைக்கு அவரை தவிர 50 பிள்ளைகள் இருக்கக்கூடும் என்பதும் ஒரு இணையதள பக்கம் மூலம் ஃபோர்சிற்கு தெரியவந்தது.
இதனால் டிண்டர் போன்ற டேட்டிங் ஆப்புகளைப் பயன்படுத்துவதில் சேவ் ஃபோர்சிற்கு சிக்கல் எழுந்துள்ளது. ஒரு வேலை டேட்டிங் ஆப் மூலம் தனக்கு அறிமுகம் ஆகும் நபர் தனது சகோதரியாக இருக்கக் கூடுமோ என்ற அச்சத்திலேயே சேவ் ஃபோர்ஸ் வாழ்ந்து வருகிறார். இதனால் தனது சகோதர சகோதரிகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் நடத்திய தேடுதல் வேட்டையில், தன் உடன் பிறந்தவர்கள் 8 பேரைக் கண்டறிந்துள்ளார். இதில் சுவாரசியமான விஷயம் ஒன்றும் உள்ளது. தனது பள்ளிப் பருவத்தில் தனக்கு நண்பராக இருந்த டேரன் என்பவர் அவரது சகோதரர் என்பதும் சேவ் ஃபோர்சிற்கு தெரியவந்துள்ளது.
தனக்குள் ஏற்பட்டிருக்கும் பயத்தினை போக்க, உடன் பிறப்புகளைக் கண்டறியும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் ஷேவ் ஃபோர்ஸ்.
Comments