கருவில் இருப்பது பெண் குழந்தையென தெரிந்ததால் பெற்றோரே மகளின் கருவை கலைத்த கொடூரம்

0 7612
கருவில் இருப்பது பெண் குழந்தையென தெரிந்ததால் பெற்றோரே மகளின் கருவை கலைத்த கொடூரம்

சேலம் அருகே பெற்றோரே மகளின் கருவை கலைத்து பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூரை அடுத்த மல்லியகரை பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் கருவுற்ற சரண்யா பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிந்ததால் தயார் பூங்கொடி உள்ளிட்டோர் போலி மருத்துவர் ஒருவர் மூலம் கரு கலைப்பு செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கில், சரண்யாவின் தாயார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், போலி மருத்துவரின் உதவியாளர் தென்னரசை கைது செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள போலி மருத்துவர் பூமணி மற்றும் சட்டவிரோதமாக ஸ்கேன் செய்த புகழ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments