கட்சியின் பலம், எதார்த்தத்தை உணர்ந்து திமுக கூட்டணியில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கட்சியின் பலம், எதார்த்தத்தை உணர்ந்து திமுக கூட்டணியில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கட்சியின் பலம், எதார்த்தத்தை உணர்ந்து திமுக கூட்டணியில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.
"நாளை மறுநாள் 18 ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக அவர் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரிகள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் டி.ராஜா வலியுறுத்தினார்.
Comments