டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டியதாக கைதான நடிகர் தீப் சித்துவின் போலீஸ் காவல் 7 நாட்களுக்கு நீட்டிப்பு

0 860
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டியதாக கைதான நடிகர் தீப் சித்துவின் போலீஸ் காவல் 7 நாட்களுக்கு நீட்டிப்பு

டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டினார் என கைது செய்யப்பட்ட பஞ்சாபி நடிகர் தீப் சித்துவின் போலீஸ் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கு இவரே முக்கிய சூத்திரதாரி என்று வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் சித்துவை கடந்த 9 ஆம் தேதி அரியானாவில் உள்ள கர்னால் புறவழிச்சாலையில் வைத்து கைது செய்தனர்.

அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. செங்கோட்டையில் நடந்த வன்முறைக்குப் பின்னால் பெரிய சதித் திட்டம் உள்ளதா என்ற கோணத்தில் இந்த வழக்கை டெல்லி போலீசின் கிரைம் பிராஞ்ச் விசாரித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments