செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு , தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தால் 5 லட்சம் டாலர் பரிசு - நாசா
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு , தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தால் 5 லட்சம் டாலர் பரிசு - நாசா
செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவர்களின் பயணத்தின் போது பொருத்தமான புதுமையான உணவுகளையும், அவற்றுக்கான தயாரிப்பு முறைகளையும் கண்டுபிடித்து கூறினால் 5லட்சம் டாலர் பரிசு வழங்குவதாக நாசா அறிவித்துள்ளது.
வரும் மே மாதம் 28 வரை பெயரை பதிவு செய்து ஜூலை 30 க்குள் தங்களது கண்டுபிடிப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நாசா தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்கர்களுக்கு மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதர நாடுளை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம், ஆனால் பரிசு கிடையாது.
ஏற்கனவே மிகவும் அதிக கலோரிகள் கொண்ட சாக்கலேட் பார்கள் விண்வெளி வீரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Comments