பிப்.18ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

பிப்.18ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
வரும் 18ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக, வரும் 19 மற்றும் 20ஆம் தேதிகளில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
Comments