மத்திய பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்த பயணிகள் பேருந்து: 7 பேர் மட்டுமே மீட்பு

0 923

மத்திய பிரதேசத்தில் 54 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்தது.

சித்தி (Sidhi) நகரிலிருந்து சத்னாவுக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்து திடீரென விபத்தில் சிக்கியது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதுவரை பேருந்தில் பயணித்த 7 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments