சீனாவின் புதிய சட்டம், விவாகரத்துக்கு 'க்யூவில்' நிற்கும் தம்பதிகள்

நம் அண்டை நாடான சீனாவில், விவகாரத்துக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டபின், விவாகரத்துக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாகவே, விவாகரத்து செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சமார் 4.15 மில்லியன் சீனத் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சீன அரசு விவாகரத்து சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தது.
அதன்படி, விவாகரத்துக்கு விண்ணப்பித்த தம்பதியினர், 30 நாட்கள் கட்டாயம் சேர்ந்து வாழ வேண்டும். பின்னர் 30 நாட்கள் கழித்து மீண்டும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். சீன அரசின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பலர், 30 நாட்கள் விருப்பமில்லாமல் துணையுடன் வாழ வேண்டுமே என்ற மன உளைச்சலில், விவாகரத்திற்கு விண்ணப்பிக்க இப்போதே வரிசை கட்டி நிற்கத் தொடங்கியுள்ளனர்.
Comments