பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 8-வது நாளாக உயர்வு... சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.91.45 க்கு விற்பனை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 8-வது நாளாக உயர்வு... சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.91.45 க்கு விற்பனை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 8வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 91 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் உயர்த்தப்பட்டு 84 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments