தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் ம.நீ.ம சார்பில் பிப்.21 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும்- கமல்ஹாசன்

தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ஒருவரே எத்தனை தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் தகுதியான வேட்பாளரைப் பரிந்துரைத்தும் விருப்ப மனுக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கட்சியின் உறுப்பினர் அல்லாதவர்களும் கூட ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments