வேளாண் சட்டங்கள் மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்கானவை அவை விவசாயிகளின் நலனுக்கானவை அல்ல - பிரியங்கா காந்தி

வேளாண் சட்டங்கள் மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்கானவை அவை விவசாயிகளின் நலனுக்கானவை அல்ல - பிரியங்கா காந்தி
புதிய வேளாண் சட்டங்கள் மூன்றும் பிரதமர் மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்காகக் கொண்டுவரப்பட்டவை என்றும், அவை விவசாயிகளின் நலனுக்கானவை அல்ல என்றும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோரில் விவசாயிகளின் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது மூன்று வேளாண் சட்டங்களும் பிரதமர் மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்காகக் கொண்டுவரப்பட்டவை என்று விமர்சித்தார்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா என பிரியங்கா கேள்வி எழுப்பினார்.
Comments