காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்கு பிப்ரவரி 21-ம் தேதி தமிழக முதலமைச்சர் அடிக்கல் : அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பதிவில் தகவல்

0 930
காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்கு பிப்ரவரி 21-ம் தேதி தமிழக முதலமைச்சர் அடிக்கல் : அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பதிவில் தகவல்

காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்கு வரும் 21 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்ட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டு கனவுத்திட்டமான இத்திட்டத்தில், காவிரி முதல் குண்டாறு வரை சுமார் 15 நதிகள் இணைக்கப்படவுள்ளன.

இதற்காக தமிழக அரசு சார்பில் சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கபட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா புதுகோட்டையில் நடைபெறவுள்ளது.

சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments