சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

0 857
சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சிவகங்கை மக்களவை தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பு அளிக்கிறது.

கடந்த, 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிதம்பரமும், அ.தி.மு.க., சார்பில் ராஜகண்ணப்பனும் போட்டியிட்டனர்.

இதில் 3ஆயிரத்து 354 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், சிதம்பரம் வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன், தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

10 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments