கொலம்பியாவில் வெறிபிடித்த பசுவிடம் சிக்கி சின்னாபின்னமான நோயாளிகள்

0 2365
கொலம்பியாவில் வெறிபிடித்த பசுவிடம் சிக்கி சின்னாபின்னமான நோயாளிகள்

கொலம்பியாவில் வெறி பிடித்த பசு ஒன்று கட்டவிழ்த்து வந்து மருத்துவமனையில் நோயாளிகளைப் புரட்டி எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

சான் ரஃபேல் என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுவதற்காக சில நோயாளிகள் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த பசு ஒன்று சிகிச்சைக்கு வந்திருந்தவர்களை சரமாரியாக முட்டித் தள்ளியது.

இதனால் நோயாளிகள் அலறியடித்து ஒரு பக்கமாக ஒதுங்கினர்.

இதனால் மேலும் மிரண்ட அந்தப் பசு அடுத்தடுத்து அவர்களை முட்டியும், கால்களால் மிதித்தும் காயப்படுத்தியது.

இறுதியில் சில இளைஞர்கள் பசுவின் கவனத்தை திசை திருப்பி அதனை வேறிடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments