50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி: அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசியால் ஒரு மரணம் கூட நிகழவில்லை எனக் கூறினார். கடந்த 7 நாட்களில் நாட்டின் 188 மாவட்டங்களில் புதியதாக யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்த ஹர்ஷவர்தன், 85 சதவீத முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
Comments