ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாய் குழாய் திட்டம்.. புதிய திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை திட்டத்துக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டி, முக்கியத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு, சென்னை மணலியில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் கேசோலின் சல்பர் நீக்கப் பிரிவு ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
நாகப்பட்டினத்தில் அமையவுள்ள காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் மூலம் சமூகப் பொருளாதார பயன்கள் அதிகரித்து, தற்சார்பு நிலையை நோக்கி நாடு நடை போடும்.
காணொலி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
Comments