அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் கால அவகாசம் நிறைவு : இன்று முதல் அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்யலாம் - வருமானவரித்துறை

0 1032
அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் கால அவகாசம் நிறைவு : இன்று முதல் அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்யலாம் - வருமானவரித்துறை

பராதமின்றி வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் நிறைவடைவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக 2019-2020 நிதியாண்டு, அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் வரை வழங்கப்பட்டு இருந்தது.

இந்த அவகாசம், டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகள் தாக்கல் செய்ய பிப்ரவரி     15-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று, அபராதமின்றி, தணிக்கை செய்யக்கூடிய கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

கணக்கு தாக்கல் செய்யாத 5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி, இன்று முதல் கணக்கு தாக்கல் செய்யலாம்.

அடுத்த மாதம் 31-ம் தேதிக்கு பின் கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments