தினமும் 2000 வெளிநாட்டு பயணிகள் வர இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி

0 874

தினமும் வெளிநாட்டு விமான பயணிகள் 2000 பேர் வருகை தருவதற்கு இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அந்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கான அனுமதி பெருமளவு குறைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், தினமும் அதிகபட்சம் 2000 வெளிநாட்டு பயணிகள் வரை இஸ்ரேலுக்கு வருவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இத்தகவலை பிரதமர் அலுவலகமும், சுகாதாரத்துறையும் உறுதி செய்துள்ளது. இஸ்ரேலுக்கு வருகை தரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments