மெரினா கடலில் குளித்த போது நீரில் முழ்கி தத்தளித்த மாணவன், முதலுதவி சிகிச்சைக்கு பின் மீட்கப்பட்ட சம்பவம்

0 620

சென்னை மெரினாவில் கடலில் குளித்த போது நீரில் மூழ்கி, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பள்ளி மாணவன், முதலுதவி சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

அண்ணாசதுக்கம் பகுதியில் எழிலகம் எதிர்புறம் வண்ணாரப்பேட்டையைச சேர்ந்த பள்ளி மாணவர்கள் லோகேஷ் மற்றும் தனுஷ்
இருவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

கடல் அலையில் சிக்கி தத்தளித்த இருவரையும் மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இவர்களில் லோகேஷ் என்ற மாணவன், முதலுதவி சிகிச்சைக்குப்பின், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மீட்பு குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் சரியான முதலுதவி செய்ததால், ஒரு மாணவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர் தனுஷின் சடலம் கரை ஒதுங்கியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments