பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவதாக வந்த தகவல் தவறானவை - மத்திய அரசு விளக்கம்

பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவதாக வந்த தகவல் தவறானவை - மத்திய அரசு விளக்கம்
பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவதாக வெளிவந்துள்ள செய்திகள் முழுவதும் தவறானவை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஏழு பட்டியல் பிரிவு இனங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், தமிழ்நாட்டின் பட்டியல் இனங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பட்டியல் பிரிவில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்படுவார்கள் என்பது முழுவதும் தவறானது என்றும்,அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
Comments