குடியரசு தின பேரணி நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு - அமைச்சர் ராஜ்நாத்சிங்

குடியரசு தின பேரணி நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
குடியரசு தின விழா பேரணியில் பங்கேற்ற போலீஸ் படைகளில் சிறந்த அணிக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை கூறினார். கொரோனா தொற்று காலத்திலும் மிக குறுகிய இடைவெளியில் பேரணிக்கு தயாராகி, போலீசார் மிகச்சிறப்பாக அணிவகுத்து வந்ததாக அவர் பாராட்டினார்.
நாட்டின் மற்ற மாநில போலீசாரை விட டெல்லி போலீசாரே மிக அதிகமான பணிச்சுமை கொண்டவர்கள் என அவர் குறிப்பிட்டார். காவலர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Comments