கே.எஃப்.ஜே : ரூ.40 கோடி மோசடி ஓராண்டாகியும் தீர்வில்லை புலம்பும் புகார்தாரர்கள்

0 2100
கே.எஃப்.ஜே : ரூ.40 கோடி மோசடி ஓராண்டாகியும் தீர்வில்லை புலம்பும் புகார்தாரர்கள்

சென்னையில் தங்கநகை சேமிப்புத் திட்டம் தொடங்கி 40 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கே.எஃப்.ஜே நகைக்கடை மீது வழக்குப்பதிவு செய்து ஓராண்டாகியும் தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி  பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சென்னை தியாகராயர் நகர், மயிலாப்பூர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் கே.எஃப்.ஜே எனும் கேரளா பேஷன் ஜுவல்லரி செயல்பட்டு வந்தது. 

இந்த நிறுவனம் தொடங்கிய தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணம் செலுத்தினர். திட்டம் முதிர்வடைந்த பிறகும் பணம் கொடுக்காததால் நேரில் சென்று பார்த்த போது கடையே காலியாக இருந்தது.

நகைகளை தராமல், அடுத்தடுத்து மூன்று கடைகளும் மூடியதால் விரக்தியடைந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போலீசில் புகாரளித்தனர்.

சுமார் 40 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் செரியன் உட்பட நிர்வாகிகள் மீது காவல் துறையின் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்துக்களை விற்பனை செய்து பணத்தை திருப்பி தருவதாக நகை கடை தரப்பில் புகார்தார்களிடம் சமாதானம் பேசப்பட்டது.

ஆனால், இந்த வாக்குறுதி காலமும் ஓராண்டை கடந்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் பொறுமையிழந்து கிண்டியில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகைகளை வைத்து தங்க நகை சேமிப்பு திட்டம் என விளம்பரப்படுத்தியதை நம்பி பணம் செலுத்தியதாவும், மாத வருவாயில் ஒரு பகுதியை முதலீடு செய்து கிடைக்காத காரணத்தால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தொழில் நஷ்டமடைந்ததாக கூறும் சுனில் செரியன், திட்டமிட்டே ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments