தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1,000 பேர் செல்ல அனுமதி - முதலமைச்சர்

தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1,000 பேர் செல்ல அனுமதி - முதலமைச்சர்
தேர்தலில் கூட்டணி அமைத்தாலும், கொள்கைகள் மாறாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை கொடீசியா அரங்கில் தமிழக கிறிஸ்துவ ஜனநாயக கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, கிறிஸ்தவ மக்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றி தரப்படும் என்றார்.
மேலும் தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1,000 பேர் செல்ல அனுமதி என கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
Comments