வளர்ச்சியை உருவாக்குவதே இலக்கு.!

0 1455

புதுக்கோட்டை மாவட்டம்,ஊனையூர் கிராமத்திலும், அரியலூர் அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த 10 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை,வேலை வாய்ப்பு இல்லை, புதிய முதலீடுகள் இல்லை என்றார். மக்களின் அவசிய, அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் 100 நாட்களில் கோரிக்கைகளைத் தீர்ப்போம் என்ற உறுதிமொழியை முன் வைத்துள்ளதாக அவர் கூறினார்.

தொகுதிவாரியாக - கிராம வாரியாக முகாம்கள் அமைத்து இப்பிரச்னைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் போது சுமார் 1 கோடி குடும்பங்கள், தங்களுக்கு ஏற்பட்ட கவலைகள், துன்ப துயரங்களில் இருந்து மீண்டிருப்பார்கள் என்று அவர் கூறினார். இந்திய அளவில் தமிழகத்திற்கும் - தமிழக மக்களுக்கும் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், பெருமையையும் தேடித் தர வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கு என்று அவர் தெரிவித்தார்.

ஊழலற்ற - ஒளிவு மறைவற்ற வெளிப்படையான - பெண்களுக்கு பாதுகாப்பான - சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் - ஏழை, எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படும் என்று அவர் உறுதி அளித்தார். புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவோம், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம், புதிய உட்கட்டமைப்பு திட்டங்கள் கொண்டு வருவோம் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments