நடிகர் சூர்யாவின் 40-ஆவது படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

நடிகர் சூர்யாவின் 40-ஆவது படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
நடிகர் சூர்யாவின் 40-வது படத்திற்கான படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்ததாக அண்மையில் நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அவரது 40-வது படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் சூர்யா பங்கேற்கவில்லை.
கொரோனா சிகிச்சைக்கு பின் ஓய்வெடுத்து வருவதால் அவர் பூஜையில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இமான் இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
Comments