இரட்டைக் குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற சம்பவம்... சந்தேகம் கிளப்பும் வனத்துறையினர்!

0 103936
இரட்டைக் குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற சம்பவம்... சந்தேகம் கிளப்பும் வனத்துறையினர்!

ஞ்சையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை குரங்குகள் தூக்கி சென்று அகழியில் வீசியதில் குழந்தை இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், குரங்கு தூக்கி சென்றதற்கான எந்த தடயமும் குழந்தையின் உடலில் இல்லை என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

தஞ்சை மேலஅலங்கம் பகுதியில் ராஜா-புவனேஸ்வரி தம்பதியின், பிறந்து எட்டு நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை கடந்த 13ஆம் தேதி குரங்குகள் தூக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது. ஒரு குழந்தையை வீடு ஓட்டின் மேலும் மற்றொரு குழந்தையை அகழியிலும் குரங்குகள் வீசி விட்டதாகவும் கூறப்பட்டது. ஓட்டின் மேல் வீசப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அகழியில் வீசப்பட்ட குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் குழந்தையின் தாய் கூறியிருந்தார். 

இது தொடர்பாக, சம்பவம் நடந்த பகுதியிலும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்களிடமும் வனத்துறையினர் விவரங்களை கேட்டறிந்துள்ளனர். குழந்தையின் மேல் குரங்கின் நகக்கீறலோ எந்தவிதமான காயமோ இல்லை எனவும் குரங்கின் ரோமம் கூட குழந்தைகள் மேல் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக வனத்துறையினர் கூறியுள்ளனர். மேலும் குழந்தையை குரங்குகள் தூக்கிச் சென்றால், அதை லேசில் விட்டுவிடாது என்றும், ஒரு கையில் குழந்தையை தூக்கிக் கொண்டு தாவிச் செல்வதற்கான வாய்ப்புகள் கிடையாது எனவும் வனத்துறையினர் கூறுகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழுமையாக விவரங்கள் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments