மத்திய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற தமிழக பல்கலை.களுக்கு மறைமுக நிர்பந்தமா?

0 2736
மத்திய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற தமிழக பல்கலை.களுக்கு மறைமுக நிர்பந்தமா?

த்திய அரசு நிதியுதவி அளிக்கும் படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி தமிழக பல்கலைகழகங்கள் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகின்றனவா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இதை எதிர்த்து 2 மாணவிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி  புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது,  மாணவர்களுக்காக பல பல்கலைக்கழகங்கள் புதிய படிப்புகளை உருவாக்கிவரும்போது, அண்ணா பல்கலைகழகம் மட்டும் 25 ஆண்டுகளாக நடக்கும் படிப்பை நிறுத்தியுள்ளதாக நீதிபதி புகழேந்தி குறிப்பிட்டார்.

யுஜிசி விதிகளில் மாநில இட ஒதுக்கீட்டை பின்பற்ற அறிவுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்ற  மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்படிப்பட்ட எண்ணம் ஏதுமில்லை என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

எந்த இடஒதுக்கீட்டை பின்பற்றுவது என தமிழக அரசிற்கு கடிதம் எழுதியது ஏன் என அண்ணா பல்கலைகழகத்திற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி எழுதப்பட்ட கடிதம்தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments