2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் சதம் : இங்கிலாந்து அணி வெற்றி பெற 482 ரன்கள் இலக்கு

0 8743
2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் சதம் : இங்கிலாந்து அணி வெற்றி பெற 482 ரன்கள் இலக்கு

ந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 482 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்னில் சுருண்டது .

இதனை அடுத்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 286 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 481 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

பந்து வீச்சில் அசத்திய இந்திய வீரர் அஸ்வின் சதம் அடித்து பேட்டிங்கிலும் அசத்தினார்.134 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடித்து சதம் கடந்த அஸ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார்.

இதனை அடுத்து இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன் எடுத்திருந்த போது 3வது நாள் ஆட்டநேரம் நிறைவுற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments