13 மனிதர்கள், 3 யானைகளை கொன்ற ராமச்சந்திரன் மீதான தடை நீக்கம்... இந்தியாவிலேயே உயரமான ஜம்போ இது!

0 89855
திருச்சூர் பூரம் விழாவில் ராமச்சந்திரன்

இந்தியாவிலேயே உயரமான 11 அடி உயரம் கொண்ட தன் வாழ்க்கையில் 13 மனித உயிர்களையும் 3 யானைகளையும் கொன்றுள்ள தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் யானை மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

கேரள மக்களின் யானை மீதான பாசம் அனைவரும் அறிந்ததே. யானைகள் இல்லாத திருவிழாவே அந்த மாநிலத்தில் பார்க்க முடியாது. யானைகளை பூனைகள் போல அங்கு வளர்ப்பார்கள். அந்த வகையில், திருச்சூர் அருகே தெச்சிக்கோட்டுக்காவு கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த ராமச்சந்திரன் என்ற யானை மம்முட்டி போலவே வெகு பாப்புலர். ஒரு விழாவில் , இந்த யானை தலைகாட்ட வேண்டுமென்றால் ரூ.3 லட்சம் வசூலிக்கப்படும். ராமச்சந்திரனை விழாவில் பங்கேற்க வைக்க, பணத்தை கொட்டி கொடுக்க தயாராகவும் இருந்தார்கள். தற்போது 55 வயதான தன் வாழ்நாளில் 13 மனிதர்களைக் கொன்றுள்ளது. அதில், 6 பேர் யானையின் பாகன்கள். மேலும், 3 யானைகளையும் தன் தந்தத்தால் குத்தி கொன்றுள்ளது. ராமச்சந்திரன் யானையால் கொல்லப்பட்ட யானைகளில் புகழ் பெற்ற திருவெம்பாடி கோயில் யானை சந்திரசேகரனும் ஒன்று.

கடைசியாக , 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் குருவாயூரில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட , ராமச்சந்திரன் திடீரென ஆவேசமடைந்து 2 பேரை காலில் போட்டு மித்தது கொன்றது. இதைத் தொடர்ந்து, யானை ராமச்சந்திரன் கோயில் திருவிழாக்களில் பங்கேற்க கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. யானை ராமச்சந்திரனுக்கு தடை விதிக்கப்படுவது 7வது முறை ஆகும். கிட்டத்தட்ட 11 அடி உயரமுள்ள இந்த யானை  6 டன் எடை கொண்டது.  யானையின் தந்தம் மட்டும் 75 சென்டிமீட்டர் நீளம் இருக்கும்.யானை ராமச்சந்திரன் எத்தனை பேரை கொன்றாலும் அதன் மீதான கிரேஸி மட்டும் கேரள மக்களுக்கு போகவில்லை. கோயில் திருவிழாக்களில் யானை ராமச்சந்திரன் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து கொண்டேதான் இருந்தது.image

ஏனென்றால், சுமார் 11 அடி உயரத்தில் சாமி சிலைகளை சுமந்து வரும் ராமச்சந்திரன் யானை காண கண்கள் கோடி வேண்டுமென்று கேரள மக்கள் சொல்வார்கள். பீகாரில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த யானை 1984 ஆம் ஆண்டிலிருந்து தெச்சிக்கோட்டுகாவு கோயிலில் வளர்ந்து வருகிறது. தற்போது, அதற்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை. மற்றொரு கண்ணிலும் பார்வை இழந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த யானைக்கு கோயில் விழாக்களில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் நடைபெறும் கோயில் விழாக்களில் வாரத்துக்கு 2 முறை யானை ராமச்சந்திரன் இனி பங்கேற்கலாம். கேரளாவில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழாவிலும் பங்கேற்க திருச்சூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. யானையை சுற்றிலும் 4 பாகன்கள் இருக்க வேண்டும். யானையை விட்டு 5 மீட்டர் தூரத்தில்தான் மனிதர்கள் நிற்க வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. 

 வளர்ப்பு  யானைகள் வளர்ப்பது சாதாரண விஷயமில்லை. ஒரு யானைக்கு சாதாரணமாக இரண்டு பாகன்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் குறைந்தது ரூ.  20,000 சம்பளம் வழங்க வேண்டும். யானை ஒன்று ஒரு நாளைக்கு 150 கிலோ உணவு சாப்பிடும். 100 முதல் 200 லிட்டர் தண்ணீர் அருந்தும். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தும் கேரளாவில் மட்டும் 521 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்படுகின்றன. செலிபிரட்டி யானையான ராமச்சந்திரன் நாள் ஒன்றுக்கு ரூ. 2 முதல் 3 லட்சம் வரை சம்பாதித்ததாக சொல்லப்படுகிறது. பிற யானைகள் நாள் ஒன்றுக்கு ரூ. 30,000 சாம்பாதிக்கும். அதே வேளையில், கேரளாவில் கோயில் விழாக்களில் கடும் வெயிலில் நிற்க வைப்பதாகவும் அவற்றுக்கு தேவையான உணவு, தண்ணீரை வழங்காமல் கொடுமைப்படுத்துவதாக விலங்கின ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments