பெட்ரோல், டீசல் ,சமையல் கேஸ் விலை உயர்வு : வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 766
பெட்ரோல், டீசல் ,சமையல் கேஸ் விலை உயர்வு : வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பெட்ரோல் டீசல் விலையைத் தொடர்ந்து சமையல் கேஸ் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரால் அறிவிக்கப்படாத பரிசாக, கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பொதுமக்கள் பயன்படுத்தும் மானியத்துடனான சமையல் கேஸ் சிலிண்டர் கொரோனா காலத்தில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டதை குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், தற்போது மானியமில்லாத சிலிண்டர் விலையையும் 50 ரூபாய் உயர்த்தி தேநீர்க்கடை, சிறு உணவகம் போன்ற எளிய மக்களின் வணிகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒரே மாதத்தில் 2வது முறையாக இந்த விலை உயர்வுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments