சென்னை மத்திய கைலாஷில் சாலையில் உருவான பள்ளத்தில் சிக்கிய லாரி... சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல்

0 3442
சென்னை மத்திய கைலாஷில் சாலையில் உருவான பள்ளத்தில் சிக்கிய லாரி... சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை மத்திய கைலாஷில் சாலையில் உருவான பள்ளத்தில் சிக்கி அரிசி லோடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த 13-ம் தேதி அங்கு சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த ராட்சத கழிவுநீர் குழாய் வெடித்து சாலையிலும் பெரிய பள்ளம் உருவானது. தற்காலிகமாக மணல் மற்றும் கற்களை கொண்டு பள்ளத்தை மூடி வைத்திருந்ததோடு, பள்ளம் இருந்ததை வாகன ஓட்டிகளுக்கு குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டுகளும் அகற்றப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை அவ்வழியாக ரேஷன் அரிசி லோடு ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கி ஒரு புறமாக கவிழ்ந்தது. 25-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி வீணாகின.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலையில் சிதறியது போக எஞ்சிய அரிசி மூட்டைகளை வேறு லாரிக்கு மாற்றி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments