நேபாளம், இலங்கையில் பாஜகவை விரிவாக்க அமித் ஷா திட்டம் - திரிபுரா முதலமைச்சர் பேச்சு

0 1486

நேபாளம், இலங்கை நாடுகளிலும் பாரதிய ஜனதாக் கட்சியையும் ஆட்சியையும் விரிவுபடுத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகத் திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேவ் தெரிவித்துள்ளார்.

அகர்தலாவில் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிப்லப் தேவ், 2018ஆம் ஆண்டு திரிபுரா சட்டமன்றத் தேர்தலின்போது, அப்போதைய பாஜக தலைவரான அமித் ஷா தன்னிடம் கட்சி விரிவாக்கம் பற்றிப் பேசியதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்ற பின் நேபாளம், இலங்கை நாடுகளிலும் கட்சியையும் ஆட்சியையும் விரிவாக்கத் திட்டம் உள்ளதாக அமித் ஷா கூறியதாகப் பிப்லப் தேவ் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments