பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை: வாடிக்கையாளர்கள் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் கசியாமல் பார்த்துக்கொள்ள எச்சரிக்கை

0 6937

பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனால் கலந்து விற்கப்படுவதாகத் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்துச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் ஆணையின்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனாலைக் கலந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலந்துள்ளதால் வாகனங்களைக் கழுவும்போதும், மழை பெய்யும்போதும் பெட்ரோல் டேங்கில் நீர் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோல் டேங்கில் தண்ணீர் கசிந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது. எத்தனால் உள்ள பெட்ரோலில் தண்ணீர் கசிந்தால் வாகனத்தை இயக்குவது கடினமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments