அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் அலுவலக நாட்களில் பணிக்கு வர மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு

0 3561
அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் அலுவலக நாட்களில் பணிக்கு வர மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு

த்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அனைத்து அலுவலக நாட்களிலும் தவறாது பணிக்கு வர வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த ஊரடங்கு தளர்வு உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு முறைகளான முக கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்படபல்வேறு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த உத்தரவு வரும் வரை பயோமெட்ரிக் முறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments