அஸ்வின் பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து அணி: இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 249 ரன்கள் முன்னிலை

0 1112

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்றுவரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது .ரோகித் சர்மா 161 ரன்களும், ரிஷப் பாண்டே 58 ரன்களும் ,ரஹானே 67 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இந்திய சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் அபாரமாகப் பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 25 ரன்னும், புஜாரா 7 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments