பிரதமர் கார் வரும் வழியில் ஆம்புலன்ஸை செலுத்திய ஓட்டுநர், பதறிய போலீசார்.!

0 2782

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே பிரதமர் மோடி வரும் பாதையில் ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடி ஐ.என்.எஸ் அடையார் கடற்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்தார். இதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதியிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிரதமர் வாகனம் வருவதற்கு சற்று முன்பு, சென்ட்ரல் எதிரே உள்ள பாலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.

முதலில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்த போலீசார், ஆம்புலன்ஸில் வந்தவர்களின் நிலையை அறிந்து வழிவிட்டனர். ஆனால் போலீசார் குறிப்பிட்ட தடத்தில் செல்லாமல் பதற்றத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரதமரின் கார் வரும் தடத்தில் ஆம்புலன்ஸை செலுத்தினார். பதறிப்போன போலீசார் ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஓடிச் சென்று நிறுத்தி தடம் மாற்றி விட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments