தமிழகத்தில் குறையும் கொரோனா: 23 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை

0 2410

தமிழ்நாட்டில், மேலும், 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற  479 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி,ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், 140 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக குறிப்பிட்டு உள்ள தமிழக சுகாதாரத் துறை அரியலூரும், பெரம்பலூரும் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments