நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 3 நாட்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு

0 1090
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 3 நாட்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அந்நகரில் 3 நாட்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 2 மாதங்களாக நியூசிலாந்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது.

வரும் 20 ஆம் தேதி முதல் அங்கு தடுப்பூசி போடும் பணிகள் துவங்க உள்ள நிலையில், தற்போது 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால், மேலும் தொற்று பரவாமல் தடுக்க திங்கள் முதல் புதன் வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிரதமர் ஜேசிந்தா (Jacinda) அமல் படுத்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments