ஜப்பானில் நிலநடுக்கம் எதிரொலி: ரயில்களின் இயக்கம் நிறுத்தம்

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சுவர்கள் இடிந்ததுடன், ஜன்னல்களும் உடைந்து சிதறின. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஃபுகுஷிமாவில் நிலச்சரிவும் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான கட்டடங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு சில நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இருக்கும் தலைநகர் டோக்கியோவிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
Comments