தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்ததும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட திருக்கடையூரில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், திமுக ஆட்சி அமைந்ததும் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனக் கூறினார்.
மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தன்னிடம் வழங்கிய மனுக்களுக்கு, திமுக ஆட்சி அமைந்த நூறு நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதி படக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் கிராமத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.
Comments